NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டயானாவின் மூன்று ஆடைகள் ஏலத்தில் !

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மூன்று ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குறித்த ஏல நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தனது 70 ஆடைகளை ஏலம் விட்டிருந்தார்.

அதில் 3 ஆடைகளை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ஆடைகளையும் டயானா பல முறை அணிந்துள்ளார் எனவும், அவை அதிகபடியாக 4 லட்சம் டொலர்கள் வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles