NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டியாகோ கார்சியா தீவில் 2 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான பரபரப்பு தகவல் !

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா (Diego García) தீவில் சுமார் 2 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 இலங்கையர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அவர்கள் முகாம்களில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான விதிமுறைகளாலும், விடுதலை நேரம் குறித்த நிச்சயமற்ற தன்மையாலும், இலங்கையர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்கியுள்ள நிலையில், தான் முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உடட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கையில் இருந்து கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில், பிரித்தானிய இந்திய கடல் கடந்த ஆள்புலங்களில் ஒன்றான, டியாகோ கார்சியா (னுநைபழ புயசஉயை) எனற் தீவில் இவர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles