NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் நாளாந்தம் 44 மில்லியன் பொலித்தீன் பைகள் பாவனை – ஆய்வில் தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் நாளாந்தம் சுமார் 44 மில்லியன் பொலித்தீன் பைகளை பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றின் பாவனை சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 4 பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதாக பல்பொருள் அங்காடிகளில் இருந்து பெறப்பட்ட ஆய்வு தகவல்களின் மூலம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கண்டறிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சனத்தொகையில் சுமார் 11 மில்லியன் மக்கள் தினசரி சந்தைக்குச் செல்வதாகவும், ஒருவர் 3 அல்லது 4 பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை சுற்றுச்சூழலில் அப்புறப்படுத்துவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்வதுடன், அதிகப்படியான பாவனை தொடருமானால் அவற்றைக் கட்டுப்படுத்த பொலித்தீன் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், அப்படியானால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொலித்தீன் பைகளை பயன்படுத்த முடியாது போகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Related Articles