மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனிகா தனது கோவிட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் TTS ஐ ஏற்படுத்தக்கூடும்” என்பதை முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தடுப்பூசி இல்லாவிட்டாலும் TTS பாதிப்பு ஏற்படலாம் என்றும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Oxford பல்கலைக்கழகத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியானது பல இறப்புகளுக்கும் கடுமையான காயங்களுக்கும் வழிவகுத்தது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சில குடும்பங்கள் தடுப்பூசியின் பேரழிவு விளைவை எதிர்கொண்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு, இரண்டு குழந்தைகளின் தந்தையான ஜேமி ஸ்காட், பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராக முதல் முறையாக புகாரளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.