பிரித்தானிய இலங்கையரான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்- பிரின் பிரதாபன் (Brin Pirathapan)தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின்; 20வது தொடர் முடிவில் வெற்றிபெற்று, மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தநிலையி;ல், பிபிசி வன்னில், நடுவர்களான ஜோன் டோரோட்;( John Torode ) ) மற்றும் கிரெக் வாலஸ்;( Gregg Wallace) ஆகியோரால் மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது.
இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாகி, 29வயதாக பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த செம்பியன்களான Thomasina Miers, Peter Bayless, James Nathan, Mat Follas, Dhruv Baker, Tim Anderson, Shelina Permalloo, Saliha Mahmood Ahmed, Kenny Tutt, Irini Tzortzoglou, Thomas Frake, Tom Rhodes, Eddie Scott,Chariya Khattiyot ஆகியோருடன் இணைந்துள்ளார்.