NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபானசாலைகளுக்குப் பூட்டு!

மே தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles