மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி N.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மீன் பிடி சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகள் தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில், கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு எவருக்கேனும் அனுமதி வழங்கப்படுகின்றபோது, உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.