NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!


கொழும்பில் மே தின அணிவகுப்புகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய மாற்றுப் பாதைகள் குறித்த விரிவான வரைபடங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை  பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்று வரும் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles