NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

11 வயதுடைய தமிழ் மாணவனின் சாதனை பயணம்!

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று ஆரம்பித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தினை இன்று ஆரம்பித்ததாக அவரது தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த பயணம் முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமானது.

குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

மேலும், இந்த சாதனை பயணத்தில் சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்து உள்ளதுடன், அவர்களை இலங்கையார்கள் அனைவரும் உற்சாகப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles