NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

G.C.E(O.L)கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டன…!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு
பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பெறுபேறுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின்
www.doenets.lk அல்லது
www.results.exams.gov.lk என்ற இணைய முகவரியின்
ஊடாகவோ பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தெரிந்து கொள்ள
வேண்டுமாயின் 1911 அல்லது 011 278 4208, 011 278 4537, 011
278 5922 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு
அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


,தேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின்
பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் நடைமுறை
பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைகக்களம்
வெளியிட்டுள்ளது.


அதன்படி, நாளை முதல்; மார்ச் 29 ஆம் திகதி வரை நாடு முழுவதும்
41 பரீட்சை நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் ,இடம்பெறும்
என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான திகதி மற்றும் இடம் விண்ணப்பதாரரின் அனுமதி
அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எக்காரணம் கொண்டும் அறிவிக்கப்பட்ட திகதி இடம்
மாற்றப்படாது என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டையில்
குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு அரை
மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles