NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்துள்ளது: நிக்கி ஹாலே

கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம் எனவும் இதனால் அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினூடாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுதொடர்பாக உரையாற்றிய நிக்கி ஹாலே, எந்த ஒரு வலுவான அமெரிக்கரும் தன் பணம் மோசமான நபர்களுக்குச் சென்றடைவதை விரும்ப மாட்டார்கள், அதனால் நான் அதிபராக தேர்வானால் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மட்டும், 3.81 இலட்சம் கோடி ரூபாயை பல நாடுகளுக்கு உதவியாக அமெரிக்கா அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவோருக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் எனவும் நிக்கி ஹாலே மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles