NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL + ARR இசைக்கச்சேரி..

IPL கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நாளை (22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணிக்கு தோனியும், பெங்களூரு அணிக்கு டிபிளெசிஸ் கேப்டனாக உள்ளனர். இருவருக்கும் சென்னையில் கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.

சேப்பாக்கம் மார்ச் 22 அதகளமாகப் போகிறது. வழக்கம் போல் IPL சீஸன் கோலாகலமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் என்ற கொண்டாட்டத்துடன், ரஹ்மானின் கச்சேரி என்ற காம்போ இணைந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ரசிகர்களுக்கு அது முழுமையான ட்ரீட்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles