NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 போட்டிகளில்நெதர்லாந்து வெற்றி – மற்றுமொரு போட்டி இடைநிறுத்தம்…!

2024 டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் D குழுவின் கீழ் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்றில் நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி அனைத்து விக்கெட்டுக்களையும் 106 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டி மழை காரணமாக வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதலில் ஸ்கொட்லாந்து அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.    

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles