NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி – பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

9ஆவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய அணிகள் 20 ஓவர் உலகக் கிண்ணத்தில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான முழு பரிசுத்தொகை விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை மதிப்பில் சுமார் 3,396,075,750.00 ரூபாய் ஆகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 739,589,830.00 ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலர் (386,397,952.00 ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 7, 87,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா 3,82,500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், 9 முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2,47,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

மேலும், 13 முதல் 20 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2,25,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இது மட்டுமில்லாமல் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை தவிர்த்து மற்ற சுற்று போட்டிகளில் (லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று) ஒரு போட்டியை வென்றால் ஒவ்வொரு அணிக்கும் தலா 31,154 அமெரிக்க டொலர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles