நாம் தினமும் பயன்படுத்தும் பல டெக்னாலஜி மற்றும் கருவிகளை நாசா கண்டுபிடித்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
அவை இல்லாமல் நம்மால் தினமும் இயங்கவே முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
நாம் கணினி பயன்படுத்தும்போது நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் ஒரு கருவி Mouse ஆகும். இதை NASA உடன் இணைந்து 1960களில் Douglas Engelbart என்பவர் கண்டுபிடித்துள்ளார். இது இல்லாமல் இப்போது கூட நாம் கணினியை பயன்படுத்துவது சிரமம்.
உலகில் இப்போது மிகவும் அத்தியாவசியமான ஒரு கண்டுபிடிப்பாக Water Purifier உள்ளது. NASA அமைப்பு இந்த கருவியை முதல் முதலாக நீர் குறைவாக இருக்கும் இடம் அல்லது நீர் தேவை அதிகம் இருக்கும் பகுதிக்கு சென்றால் ஏற்கனவே பய்னபடுத்திய நீரை பயன்படுத்துவதற்காக கண்டுபிடித்தது.
இந்த கருவியை தனியாக உருவாக்கவில்லை என்றாலும் வேறு ஒரு ஆடியோ நிறுவனத்துடன் சேர்ந்து NASA உருவாக்கியது.
கடலில் Project Mercury ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒருவரின் Capsule திடீரென்று வெடித்து சிதறியது. இதனால் அதன் தொடர்பு பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் மாட்டிக்கொண்டார். அப்போது ஹெலிகாப்டர் உதவியுடன் அவர் மீட்டெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு வயர் இல்லாத தொலைதொடர்பின் அவசியத்தை உணர்ந்த NASA ‘Pacific Plantronics’ என்ற நிறுவனத்துடன் இணைந்து MS-50 என்ற Wireless Headphone ஒன்றை உருவாக்கியது.
இதே டெக்னாலஜி பயன்படுத்தி 2000ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் விலை குறைந்த Wireless Headphone உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.