NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென் ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்தில் சிக்கி 31 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 18 ஆம் திகதி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,

‘ப்ரீஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தின் செயல்பாடு கடந்த 1990-களில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த கனிம வளங்கள் தீர்ந்துவிட்டதால் அது மூடப்பட்டது.

இந்த சுரங்கத்தில் அவ்வப்போது சட்டவிரோதமாக கனிம படிவங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுரங்கப் பணியின் போது எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்தினால் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாகவே இடம்பெற்று வருகிறது’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles