(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியா – தெலுங்கானா மாநிலத்தில் மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் ‘No Bag Day’ என்ற புதிய திட்டத்தை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பாடசாலைகளில் மாதாந்தம் ‘நோ பேக் டே’ திட்டம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மாதமும் 4ஆவது சனிக்கிழமையன்று இந்த ‘நோ பேக் டே’ கடைபிடிக்கப்படவுள்ளது.
அந்த நாட்களில் பாடசாலைக்கு புத்தக பையை கொண்டு செல்ல வேண்டாம்.
ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பைகள் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த ‘நோ பேக் டே’ நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இந்த ‘நோ பேக் டே’ நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும் எனவும் அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.