NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டமைக்குத் நானும் அரசில் அங்கம் வகிக்கும் பலரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக அண்மையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நாட்டின்முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷஉள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் எனவும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதற்கான காரணங்களை விளக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் எனவும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

Share:

Related Articles