NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிரி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவை திருடிய வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய  சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியசாலையில் வாட் ஒன்றின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமரா ஒன்றை சம்பவதினமான வியாழக்கிழமை (10) இரவு அங்கு கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவர் கழற்றி திருடிக் கொண்டதை  திருடிய சிசிரி கமராவில் வீடியோ படக்காட்சி பதிவாகியுள்ளது

இதன அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து  குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share:

Related Articles