NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபான விலை அதிகரிப்பினால், மது உற்பத்தி மற்றும் விற்பனையில் வீழ்ச்சி…!

மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பன குறைந்துள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடிய தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் மேற்பார்வை குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன்,இந்த வருடத்தில் 217 பில்லியன் ரூபா வருமானத்தை மதுவரி திணைக்களம் எதிர்பார்த்த போதிலும், ஜூன் மாதத்திற்குள் 72.98 பில்லியன் ரூபா வருமானம் மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles