NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு பணிப்புரை..!

பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத்தால் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பருவச் சீட்டைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles