தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ திரைப்படம் இன்று ரீரிலீஸ் ஆகயிருப்பதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காமெடி நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ’இந்தியன்’ திரைப்படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ’இந்தியன்2 திரைப்படம் தற்போது உருவாகி அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ’இந்தியன்’ திரைப்படத்தின் முதல் பாகம் இன்று ரீரிலீஸ் ஆகிறது. இதனை அடுத்து திரையரங்குகளில் கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கமலா தியேட்டரில் ’இந்தியன்’ தாத்தாவுக்கு வைத்த கட்-அவுட்டுக்கு நடிகர் ரோபோ சங்கர் பாலாபிஷேகம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை அடுத்து கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் சந்தித்த ரோபோ சங்கர், கமல்ஹாசன் குறித்து பெருமையாக பேசி இருந்த நிலையில் தற்போது இந்தியன் படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







