NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறுதிகட்ட படப்பிடிப்பில் அருண் விஜயின்

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார். பாலா இதற்கு முன் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா திரைப்படமும் பாதியிலே கைவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறது என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அருண் விஜயுடன் மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Share:

Related Articles