NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மானுஷி சில்லர்

பிரபல Bollywood நடிகை மானுஷி சில்லர். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் “Pade Mian Chot Mian” . இப்படத்தில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த April 11 திரையரங்குகளில் வெளியானது. 26 வயதாகும் மனுஷி சில்லர், 56 வயதாகும் நடிகர் அக்சய் குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பதாக கூறி சிலர் இணையத்தில் விமர்சித்து வந்தனர்.

தற்போது, இந்த விமர்சனங்களுக்கு நடிகை மானுஷி சில்லர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எனக்கும் அக்சய் குமார் சாருக்கும் 30 வயது வித்தியாசம் இருப்பதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை பார்த்தேன். அக்சய் குமார் Bollywoodல் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை இங்கு யார் வேண்டாம் என்று நிராகரிப்பார்கள்.

அக்சய் குமார் சாருடன் நடிக்கும்போது எங்களுக்கிடையேயான வயது வித்தியாசமெல்லாம் தெரியவில்லை என இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share:

Related Articles