NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“King Of Kotha” விமர்சனம்

மலையாள சினிமாக்களின் ஆதிக்கம் கடந்த சில வருடங்களாக தென்னிந்தியா முழுவதும் இருந்து வருகிறது. இந்த அலைக்கு முக்கிய காரணங்களில் துல்கர் சல்மானும் ஒருவர், அவர் நடிப்பில் வெளிவந்துள்ளது “King Of Kotha”

“கொத்தா” என்ற பகுதியை பல வருடங்களாக மாறி, மாறி சில Gangstars ஆண்டு வருகின்றனர். அது ஒரு நாள் “கண்ணன் பாய்” கையில் வருகிறது.

பல கட்ட மோதல், காதல், துரோகத்தால் துல்கர் கொத்தாவை விட்டே செல்ல, கண்ணன் அங்கு தலையெடுக்க, இதை அடக்க பிரசன்னா மீண்டும் துல்கர் சல்மானை கொத்தாவிற்கு வர வைக்கிறார், பிறகு கொத்தா யாருக்கு சொந்தமானது என்பதே மீதிக்கதை.

படத்தில் பரபரப்பு எனது துளிக்கூட இல்லை, அங்கங்கே Twist என்று ஒன்றை சொல்கிறார்கள், அதுவும் படத்திற்கு எந்த ஒரு விறுவிறுப்பு ஆர்வத்தையும் கூட்ட வில்லை.

சிறிது நேரம் வந்தாலும் ரஞ்சித் பாய் ஆக வருபவர் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. இந்த படத்தை பார்க்க ஒரு காரணம் சொல்லியே ஆகவேண்டும் என்றால் இசை மட்டும் தான்.

Share:

Related Articles