NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Partner” பட விமர்சனம்

பெண்ணாக மாறும் ஆண், அதன் பிறகு நடக்கும் கலாட்டாக்கள் தான் “Partner”

Hero கிராமத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பி வருகிறார். சென்னையில் தனது நண்பர் கல்யாணை சந்தித்து, அவரிடம் வேலை கேட்கிறார்.

கல்யாண் ஒரு திருடன் எனவே அதே தொழிலில் ஸ்ரீதரையும் இழுத்துவிடுகிறார். அதன் பின் அவர்களுக்கு ஒரு வேலை தேடிவருகிறது. (பாண்டியராஜன்) மனித Genitics பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்த ஆராய்ச்சிக்கு முக்கியமான CHIPஐ திருட வேண்டும். அதைக் கொண்டு போய் கொடுத்தால் ஸ்ரீதர் – கல்யாணுக்கு 50 லட்சம் கிடைக்கும். அந்த திருட்டுக்காக lap போகும் போது ஒரு விபத்து நடக்கிறது.

அதனால் கல்யாண் பெண்ணாக மாறிவிடுகிறார். அதாவது யோகி பாபு – ஹன்சிகாவாக மாறுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

படத்தில் சில இடங்களில் இயக்குநர் மனோஜ் தாமோதரன் நகைச்சுவை கொண்டு வந்திருக்கிறார்.

ஆதி – ஹன்சிகா சார்ந்த சில காட்சிகள், தங்கதுரையின் சில காமெடிகள் இவை எல்லாம் படத்தின் fun modeக்கு உதவுகிறது.

படத்தின் முதன்மையான புள்ளியே யோகிபாபு ஹன்சிகாவாக மாறுவதுதான். ஆனால் அந்த மாறுதல் நடப்பதே இடைவேளையின் போதுதான். அதற்கு முன்பு பாதி படம் திக்கித் திணறுகிறது.

படத்தின் VFX மற்றும் CG மிக மோசமாக இருக்கிறது. உதாரணமாக யோகி பாபு – ரவிமரியா காரில் செல்வது போன்ற ஒரு காட்சி. அதில் கார் நகராமல் தான் நிற்கிறது, ஆனாலும் அது ஓடிக் கொண்டிருப்பது போல செய்யப்பட்டிருக்கும் CG அப்பட்டமாக தெரிகிறது.

Share:

Related Articles